Pongu Tamizh Pongu Tamizh  

புனர்வாழ்வு முகாமில் 17 கைத்தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

புனர்வாழ்வு முகாமில் 17 கைத்தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

 

மன்னார் மருதமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களிடமிருந்து 17 கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக புதிய இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபாய மெதவல தெரிவித்துள்ளார். இத் தொலைபேசிகளை அவர்கள் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினருடன் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட பொருட்களில் கைத் தொலைபேசிகளுக்கான 14 சிம் அட்டைகள், முப்பது பற்றரிகள் மற்றும் 21 சார்ஜர்கள் என்பனவும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு முகாமில் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் துரிதமான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சில கைத் தொலைபேசிகளை அவர்கள் இராணுவத்தினரின் கண்களில் படாது புதைத்து வைத்திருந்ததாகவும் இத் தொலைபேசிகள் மூலம் வெளிநாட்டு அழைப்புகளை மேற்கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்ட்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். இவ் வெளிநாட்டு அழைப்புகள் மூலம் விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருக்க முடியும் எனவும் பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

புனர்வாழ்வு முகாம்களில் உள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளபோதும் உள்வரும் அழைப்புகளுக்கு மட்டும் கண்காணிப்புடன் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுவருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

 
புதினங்கள்
செய்திகள்